Thursday, 28 August 2014

International Kullu Dussehra festival to from Oct 3

தசரா பண்டிகையையொட்டி சிம்லாவில் சர்வதேச கொலு திருவிழாவை நடத்த இமாச்சலப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

வரும் அக்டோபர் 3 முதல் 9ம் தேதி வரை நடைபெறும் இந்த கொலு திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவினருடன் அம்மாநில முதல் மந்திரி வீரபத்ர சிங் இன்று ஆலோசனை நடத்தினார்.

ஆயிரக்கணக்கான் பக்தர்கள் சூழ கடவுள்களின் பிரமாண்ட சிலைகள் ஊர்வலமாக செல்லும்போது, உடன் செல்லும் நான்கைந்து பேர் பிச்சை எடுக்கும் வழக்கம் மாற்றப்பட வேண்டும். இது தெய்வங்களை அவமதிப்பது போன்ற இழிச்செயலாகும்.

இந்த பழக்கத்தை மாற்ற மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று வீரபத்ர சிங் கூறினார்.

ஆலயங்க்ளுக்குள் சுத்தமும், சுகாதாரமும் பேணப்பட வேண்டும். பழைய கோயில்கள் மூடப்பட்டன; அங்குள்ள சிலைகளுக்கு முன்பு விளக்கு ஏற்ற ஆளேயில்லை என்ற நிலைமை தமது அரசில் உருவாகாது என்றும் அவர் உறுதியளித்தார்.

Wednesday, 27 August 2014

இன்று முதல் ரூ.100-க்கு விமான டிக்கெட் வழங்குகிறது ஏர் இந்தியா


ஏர் இந்தியா விமான நிறுவனம் இன்று முதல் ரூ. 100- க்கு விமான டிக்கெட் வழங்குகிறது.

ஏர் இந்தியா விமான நிறுவனம் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் இணைந்த நாளான ஆகஸ்ட் 27-ம் தேதி ஏர் இந்தியா தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  ஏர் இந்தியா விமான நிறுவனம் இன்று முதல் 5 நாட்களுக்கு சலுகை விலையில் ரூ 100-க்கு டிக்கெட் விற்பனை செய்கிறது.

 ‘‘இத்தருணத்தில் ஏர் இந்தியா தனது பயணிகளுக்கு சலுகை கட்டணத்தை தொடங்கியுள்ளது. இச்சலுகை திட்டத்தின்கீழ் ரூ 100 ரூபாய்க்கு டிக்கெட் (வரிகள் தவிர) விற்பனை செய்யப்படும். விமான டிக்கெட்களை ஏர் இந்தியா இணையதளம் மூலமாக மட்டுமே பெற முடியும். ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரையில் மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கு மட்டும் ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை 5 நாட்கள் சலுகை டிக்கெட் விற்பனை செய்யப்படும்.” என்று ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக ஏர் இந்தியா நிறுவனம் இத்தினத்தை கொண்டாடுகிறது. விழாவையொட்டி சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளது. 

Tuesday, 26 August 2014

Cocaine worth Rs 8 crore seized

Kolkata, Aug 25 (PTI) Army jawans have seized cocaine
worth approximately Rs 8 crore in Manipur and caught two
civilians, officials said today.
    Based on a specific input received from the Narcotics
Control Bureau (NCB), troops of the Red Shield Division
launched a joint operation in Churachandpur town and seized a
consignment of 1.5 kg of cocaine on August 20, an Army
communique said.
    Two persons - Paolun Simte, 58, and Khaijapau, 65, -
were apprehended by the jawans in the case.
    In another case, the tropps apprehended a People
Liberation Army (PLA) cadre from general area Torbung Bazar in
Churachandpur today, it said.

Tuesday, 19 August 2014

வெளிநாட்டு வினோதங்கள்


மிக நீண்ட முடியைக் கொண்ட பூனை

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் வசிப்பவர் ஜாமி சுமித். இவர் கடந்த 2 வருடங்களாக சோபி என்னும் ஒரு பூனையை வளர்த்து வருகிறார். இந்த பூனையின் முடி அனைவரும் வியப்பூட்டும் வகையில் 25.68 சென்டி மீட்டர் நீளம் (10.11 அங்குலம்) வளர்ந்து இருக்கிறது. அதன் வால்பகுதியில் இந்த நீளத்திற்கு அடர்த்தியாக முடி வளர்ந்து உள்ளது.

இதன் காரணமாக இந்த பூனை கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்து இருக்கிறது. இதற்கு முன்பு முடி நீளத்திற்காக கின்னஸ் சாதனையில் இடம் பிடித்த பூனையான கலோனல் மியாவ் என்னும் பூனையை விட இதன் முடி ஒரு அங்குல நீளம் அதிகமாக இருக்கிறது.

இந்த பூனையை 3 வார குட்டியாக இருந்தபோது ஜாமி எடுத்து வளர்க்க ஆரம்பித்தாராம். இந்த இரண்டு ஆண்டுக்குள் இத்தனை வளர்ச்சியை நான் எதிர்பார்க்கவில்லை என்கிறார், கின்னஸ் சாதனை மகிழ்ச்சியோடு.

இனிப்பை தின்றவருக்கு ஏற்பட்ட கசப்பு

அமெரிக்காவின் எலிபெத்சிட்டி நகரைச் சேர்ந்தவர் பிராட்லி ஹார்டிசன். 24 வயது வாலிபரான இவர் அண்மையில் வடக்கு கரோலினா நகரில் போலீசார் குற்றத் தடுப்பு விழிப்புணர்வுக்காக நடத்திய தின்பண்ட போட்டியில் கலந்து கொண்டார். இதில் பொதுமக்களுடன் போலீசாரும் கலந்து கொண்டு இனிப்பு ரொட்டிகளை ஒரு கை பார்த்தனர். இந்த போட்டியில் ஹார்டிசன் இரண்டே நிமிடங்களில் 8 இனிப்பு ரொட்டிகளை தின்று சாதனை படைத்தார். இவரது சாதனை பற்றிய தகவல் மறுநாள் அங்குள்ள ஊடகங்களில் ஹார்டிசனின் புகைப்படத்துடன் வெளியானது.

இந்த செய்தி காம்டென் கவுன்டி நகர ஷெரீப்பான மாக்ஸ் ராப்சனின் கண்களிலும் தென்பட்டது. அப்போது அவருக்கு ஹார்டிசனை எங்கேயோ பார்த்த ஞாபகம் ஏற்பட்டது. அவர் மூளையை கசக்கி யோசித்தபோது ஹார்டிசன் 9 மாதங்களுக்கு, முன்பு 2 கொடுக்கல் வாங்கல் தகராறுகளில் அத்துமீறி நடந்து கொண்டதற்காக தனது கவுன்டியின் விசாரணைக்காக தேடப்படுபவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து ஷெரீப் ராப்சன் போலீசுக்கு தகவல் தெரிவிக்க ஹார்டிசனை போலீசார் கைது செய்து விட்டனர். 

Thursday, 14 August 2014

Real Estate Property News

Dailythanthi provides latest tamil news of Indian and Tamilnadu Newspaper. It also include the news of Tamilnadu Politics,Sports Newspaper,Daily Sports News,Indian Stock News,Tamil Cinema News,Rasi Palan,Tamil Story Books,Jothidam Magazines etc.

Online NewsPaper

Get the current News in Online NewsPaper,latest  breaking news,Tamil News,Live Sports News,Cricket  Live News,Finance News,Real Estate Property News.Dailythanthi provides the daily updates of state news in Online NewsPaper.

Tamil ePaper

Dailythanthi - World No 1 leading Tamil Daily News website delivers in Tamil Nadu,Aanmeegam Books,Tamil Ilakkiya Varalaru,Tamil Varalaru Books,Tamil Kalanjiyam Story

Monday, 11 August 2014

வெளிநாட்டு வினோதங்கள்

புதின் மகளுக்கு எதிராக போராட்டம்

ஸ்காட்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூருக்கு கடந்த மாதம் 17–ந் தேதி வந்து கொண்டிருந்த மலேசிய விமானம் ஒன்று கிழக்கு உக்ரைன் பகுதியில் வந்த போது ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த சம்பவத்துக்கு ரஷியாவும் பின்னணியில் இருப்பதாக உலக நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த சம்பவம் நடந்த போது ரஷிய அதிபர் புதினின் மகள் மரியா, தனது ஆண் நண்பர் ஜோரிட் பாசனுடன் ஸ்காட்லாந்தின் வூர்ஸ்காட்டன் பகுதியில்தான் வசித்து வந்தார். ஆனால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்துக்குப்பின் மரியாவுக்கு எதிராக ‘டுவிட்டர்’ சமூவ வலைத்தளத்தில் பல்வேறு கண்டனங்கள் எழுந்தன. மேலும் அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென கண்டன போராட்டங்களும் நடந்தன.

எனவே மரியா, தனது ஆண் நண்பருடன் ஸ்காட்லாந்தை விட்டு வெளியேறிவிட்டார். ஆனால் அவர் வாழ்ந்து வந்த பகுதியில் உள்ள மக்கள், மரியாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

பூக்கள் வாடுவதை தடுக்கும் வழி


காண்போரின் மனதை கொள்ளையடிக்கும் வகை வகையான பூக்கள், குறுகிய நேரத்தில் வாடி விடுகின்றன. இதனால் அந்த மலர்களை சூடும் மங்கையரின் முகமும் வாடுகின்றன. பல்வேறு வகையான விலை உயர்ந்த மலர்களால் தயாரிக்கப்படும் பூங்கொத்துகளும் விரைவில் வாடுவதால் வியாபார ரீதியிலும் நஷ்டத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் பூக்கள் வாடுவதை தடுப்பதற்கான வழிமுறை ஒன்றை ஜப்பான் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.  டோக்கியோவின் கிழக்குப்பகுதியான சுகுபாவில் அமைந்துள்ள தேசிய வேளாண்மை மற்றும் உணவுப்பொருள் ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், அங்கு பூத்து குலுங்கும் ‘மார்னிங் குளோரி’ எனப்படும் ஒருவகையான மலரை ஆய்வு செய்தனர்.

அப்போது மலர்கள் வாடுவதற்கு ஒருவகையான மரபணுதான் காரணம் என கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இந்த மரபணுவை அடக்குவதன் மூலம், மலர்களின் ஆயுட்காலத்தை இரு மடங்காக உயர்த்த முடியும் என்பதையும் அந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.