புதின் மகளுக்கு எதிராக போராட்டம்
ஸ்காட்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூருக்கு கடந்த மாதம் 17–ந் தேதி வந்து கொண்டிருந்த மலேசிய விமானம் ஒன்று கிழக்கு உக்ரைன் பகுதியில் வந்த போது ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த சம்பவத்துக்கு ரஷியாவும் பின்னணியில் இருப்பதாக உலக நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த சம்பவம் நடந்த போது ரஷிய அதிபர் புதினின் மகள் மரியா, தனது ஆண் நண்பர் ஜோரிட் பாசனுடன் ஸ்காட்லாந்தின் வூர்ஸ்காட்டன் பகுதியில்தான் வசித்து வந்தார். ஆனால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்துக்குப்பின் மரியாவுக்கு எதிராக ‘டுவிட்டர்’ சமூவ வலைத்தளத்தில் பல்வேறு கண்டனங்கள் எழுந்தன. மேலும் அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென கண்டன போராட்டங்களும் நடந்தன.
எனவே மரியா, தனது ஆண் நண்பருடன் ஸ்காட்லாந்தை விட்டு வெளியேறிவிட்டார். ஆனால் அவர் வாழ்ந்து வந்த பகுதியில் உள்ள மக்கள், மரியாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
பூக்கள் வாடுவதை தடுக்கும் வழி
காண்போரின் மனதை கொள்ளையடிக்கும் வகை வகையான பூக்கள், குறுகிய நேரத்தில் வாடி விடுகின்றன. இதனால் அந்த மலர்களை சூடும் மங்கையரின் முகமும் வாடுகின்றன. பல்வேறு வகையான விலை உயர்ந்த மலர்களால் தயாரிக்கப்படும் பூங்கொத்துகளும் விரைவில் வாடுவதால் வியாபார ரீதியிலும் நஷ்டத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் பூக்கள் வாடுவதை தடுப்பதற்கான வழிமுறை ஒன்றை ஜப்பான் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். டோக்கியோவின் கிழக்குப்பகுதியான சுகுபாவில் அமைந்துள்ள தேசிய வேளாண்மை மற்றும் உணவுப்பொருள் ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், அங்கு பூத்து குலுங்கும் ‘மார்னிங் குளோரி’ எனப்படும் ஒருவகையான மலரை ஆய்வு செய்தனர்.
அப்போது மலர்கள் வாடுவதற்கு ஒருவகையான மரபணுதான் காரணம் என கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இந்த மரபணுவை அடக்குவதன் மூலம், மலர்களின் ஆயுட்காலத்தை இரு மடங்காக உயர்த்த முடியும் என்பதையும் அந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

No comments:
Post a Comment