Tuesday, 19 August 2014

வெளிநாட்டு வினோதங்கள்


மிக நீண்ட முடியைக் கொண்ட பூனை

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் வசிப்பவர் ஜாமி சுமித். இவர் கடந்த 2 வருடங்களாக சோபி என்னும் ஒரு பூனையை வளர்த்து வருகிறார். இந்த பூனையின் முடி அனைவரும் வியப்பூட்டும் வகையில் 25.68 சென்டி மீட்டர் நீளம் (10.11 அங்குலம்) வளர்ந்து இருக்கிறது. அதன் வால்பகுதியில் இந்த நீளத்திற்கு அடர்த்தியாக முடி வளர்ந்து உள்ளது.

இதன் காரணமாக இந்த பூனை கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்து இருக்கிறது. இதற்கு முன்பு முடி நீளத்திற்காக கின்னஸ் சாதனையில் இடம் பிடித்த பூனையான கலோனல் மியாவ் என்னும் பூனையை விட இதன் முடி ஒரு அங்குல நீளம் அதிகமாக இருக்கிறது.

இந்த பூனையை 3 வார குட்டியாக இருந்தபோது ஜாமி எடுத்து வளர்க்க ஆரம்பித்தாராம். இந்த இரண்டு ஆண்டுக்குள் இத்தனை வளர்ச்சியை நான் எதிர்பார்க்கவில்லை என்கிறார், கின்னஸ் சாதனை மகிழ்ச்சியோடு.

இனிப்பை தின்றவருக்கு ஏற்பட்ட கசப்பு

அமெரிக்காவின் எலிபெத்சிட்டி நகரைச் சேர்ந்தவர் பிராட்லி ஹார்டிசன். 24 வயது வாலிபரான இவர் அண்மையில் வடக்கு கரோலினா நகரில் போலீசார் குற்றத் தடுப்பு விழிப்புணர்வுக்காக நடத்திய தின்பண்ட போட்டியில் கலந்து கொண்டார். இதில் பொதுமக்களுடன் போலீசாரும் கலந்து கொண்டு இனிப்பு ரொட்டிகளை ஒரு கை பார்த்தனர். இந்த போட்டியில் ஹார்டிசன் இரண்டே நிமிடங்களில் 8 இனிப்பு ரொட்டிகளை தின்று சாதனை படைத்தார். இவரது சாதனை பற்றிய தகவல் மறுநாள் அங்குள்ள ஊடகங்களில் ஹார்டிசனின் புகைப்படத்துடன் வெளியானது.

இந்த செய்தி காம்டென் கவுன்டி நகர ஷெரீப்பான மாக்ஸ் ராப்சனின் கண்களிலும் தென்பட்டது. அப்போது அவருக்கு ஹார்டிசனை எங்கேயோ பார்த்த ஞாபகம் ஏற்பட்டது. அவர் மூளையை கசக்கி யோசித்தபோது ஹார்டிசன் 9 மாதங்களுக்கு, முன்பு 2 கொடுக்கல் வாங்கல் தகராறுகளில் அத்துமீறி நடந்து கொண்டதற்காக தனது கவுன்டியின் விசாரணைக்காக தேடப்படுபவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து ஷெரீப் ராப்சன் போலீசுக்கு தகவல் தெரிவிக்க ஹார்டிசனை போலீசார் கைது செய்து விட்டனர். 

No comments:

Post a Comment