இளைஞர்களின் விடிவெள்ளி அப்துல் கலாம் மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் ஐ.ஐ.எம். கருத்தரங்கில் உரையாற்றிக் கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அப்துல் கலாம் காலமானார். அவர் இறந்த செய்தையைக் கேட்டு ஒட்டு மொத்த இந்திய தேசமும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
அவரது மறைவுக்கு
இரங்கல் தெரிவித்துள்ள குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவரது ஈடு செய்ய முடியாத இழப்பிற்கு தனது ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துள்ளார். துணைத் தலைவர் ஹமீது அன்சாரி நாட்டின் அனைத்து பகுதிக்கும் சொந்தக்காரர் கலாம் என்றும், அவர் ஒரு தொழில் நுட்ப ஆளுமைத் திறன் மிக்கவர் என்றும் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இதே போன்று தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி இளைஞர்களை வழி நடத்திய சகாப்தம் ஓய்ந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் சிங் ராஜ்நாத் சிங் தனது இரங்கல் செய்தியில், கலாம் காலமானது மிகவும் துக்கமான செய்தியென்றும், அவர் அனைவருக்கும் முன்மாதிரியாக இருந்தவர் எனவும் கூறியுள்ளார். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு எனவும் ராஜ்நாத் கூறியுள்ளார்.
இதே போன்று மத்திய மந்திரி நிதின் கட்காரி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் கட்சிகளைக் கடந்து அப்துல் கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஏ.ஆர் ரஹ்மான் உட்பட பாலிவுட் திரையுலகத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும், சமூக வலைதளங்களில் அப்துல் கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
For More Information,Visit us on :-