நைஜீரியாவின் வடகிழக்கு நகரமான மைதுகிரிக்கு அருகே மேலும் ஒரு தற்கொலைத் தாக்குதல் நடந்துள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.
நேற்று முன் தினம் பள்ளிவாசல் ஒன்றில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 30-க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருந்த நிலையில், இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. நேற்று மசூதியில் மாலை நேர தொழுகை நடந்துகொண்டிருந்த போது, மூன்று பெண் தற்கொலைப் படையினர் தங்களின் உடலில் பொருத்தியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கவைத்து தாக்குதல் நடத்தியதாகவும், அதில் மேலும் நான்கு பேர் பலியானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இருநாள் தாக்குதல்களிலும் குறைந்தது 34 பேர் பலியானதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் உள்ளூர் மக்களோ 60-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருப்பதாக தெரிவிக்கின்றனர். நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கு நைஜீரிய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
No comments:
Post a Comment