இணைய வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டின் ‘பிக் டே சேல்ஸ்’ குறித்து சில எதிர்மறையான விமர்சனங்கள் அண்மையில் வெளியான போதிலும், ஷாப்பிங் விரும்பிகளுக்கு ஆன்லைன் ஷாப்பிங் மீதுள்ள மோகம் இன்னும் அதிகரித்திருக்கிறது என்பது சமீபத்தில் பல்வேறு தரப்பு ஆன்லைன் வாடிக்கையாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.
வழக்கமாக, ஆன்லைன் ஷாப்பிங் விகிதம் 56 சதவீதமாக உள்ள தலைநகர் டெல்லியில், விழாக்கால சிறப்பு விற்பனையை ஒட்டி, ஆன்லைன் ஷாப்பிங் விகிதம் திடீரென 88.5 சதவீதமாக உயர்ந்துள்ளதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
மும்பை(80.5) அகமதாபாத்(78) பெங்களூரு ஆகிய நகரங்கள் டெல்லிக்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment