அமெரிக்காவின் அதி நவீன போர் ஜெட் விமானமான F-16 ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளின் தாக்குதலால் முடங்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
100 மில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த F-16 ஜெட் விமானத்தை கடந்த செவ்வாய் அன்று ஆப்கனின் சயித் கரம் மாவட்டத்தில் உள்ள பக்தியா மாகாணத்தில் வைத்து சுட்டு வீழ்த்தியதாக ஒரு தீவிரவாத குழு ட்விட்டரில் தெரிவித்தது.
இந்நிலையில், அமெரிக்க ராணுவ அதிகாரிகள் இன்று அந்த தகவலை உறுதி செய்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு தலிபான்கள் காரணமாயிருக்கலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் ஜெட் விமானத்தின் குண்டுகளை வீசும் 2 ட்ராப் டேங்குகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் காயங்களுடன் பைலட் உயிர் தப்பியுள்ளார். இதுவரை பல்வேறு சிறிய ரக ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்தியுள்ள தலிபான்கள் முதல் முறையாக 50 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கக் கூடிய சூப்பர் சானிக் ஜெட் விமானத்தை தாக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
For More Information,Visit us on :-
No comments:
Post a Comment