Friday, 30 October 2015

ஜம்மு காஷ்மீர் எம்.எல்.ஏ மீது மை வீச்சு: டெல்லியில் பரபரப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சுயேட்சை எம்.எல்.ஏ இன்ஜினீயர் ரஷீத் மீது மூன்று அடையாளம் தெரியாத மர்மநபர்கள் மை வீசி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தாக்குதலுக்குள்ளான ரஷீத் இது குறித்து கூறுகையில், “ பாகிஸ்தானின் தலிபான் ஆதிக்கத்தைப் பற்றி மக்கள் விவாதிக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறதென்று பாருங்கள். இவர்கள் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள். காஷ்மீரில் 80 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். என் மீது மை வீசியதால் எதுவும் மாறிவிடப்போவதில்லை.” என்றார்.

மாட்டுக்கறி விருந்து வைத்ததற்காக சில வாரங்கள் முன்பு ரஷீத் மீது பா.ஜ.க எம்.எல் ஏ-க்கள் சட்டமன்றத்திலேயே அடித்து உதைத்தது நினைவுகூரத்தக்கது.

For More Information,Visit us on :-

No comments:

Post a Comment