Wednesday, 26 November 2014

Man held for molesting minor daughter

பெற்ற மகள் என்றும் பாராமல் 12 வயது சிறுமியை சீரழித்த 40 வயது கொடியவன் கைது

மும்பை, நவ.26-

மராட்டிய மாநிலம், பல்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் பகுதியை சேர்ந்த ரமேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இதே பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் வேலை செய்து வருகிறான்.

40 வயதாகும் ரமேஷுக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த ஓராண்டுக்கு முன்னர் ஒருநாள், மனைவி வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த தனது 12 வயது மகளை பலாத்லாராம் செய்த ரமேஷ், பெற்ற மகள் என்றும் பாராமல் அந்த சிறுமியை கற்பழித்து விட்டான்.

பின்னர், ஒரு சில நாட்களில் மனைவி வேலைக்கு சென்ற பிறகு ருசி கண்ட பூனையாய்
வீட்டையே சுற்றிவந்த அவன் அந்த சிறுமியை மிரட்டி கற்பழிப்பதையே வாடிக்கையாக்கிக் கொண்டான்.

குடும்பத்தில் சண்டை, சச்சரவு ஏற்பட்டு விடுமே என்ற பயத்தில் அந்த காமுகன் செய்த கொடூரத்தை பெற்ற தாயிடம் கூட கூறாமல் இத்தனை நாட்களாக மறைத்து வைத்திருந்த சிறுமி, நேற்று இந்த தகாத உறவைப் பற்றி அம்மாவிடம் சொல்லி அழுதிருக்கிறாள்.

இதனையடுத்து, அவர்கள் இருவரும் அளித்த புகாரின் பேரில் ரமேஷை நேற்றிரவு கைது செய்த போலீசார், ஏராளமான குற்றப்பிரிவுகளின்கீழ் அவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.



Tuesday, 25 November 2014

Indian Railways team in China for Delhi Chennai bullet train

உலகிலேயே இரண்டாவது நீளமான சென்னை-டெல்லி புல்லட் ரெயில்:சீனாவில் இந்திய அதிகாரிகள் ஆய்வு

பீஜிங், நவ.25-

சீனாவின் தலைநகரான பீஜிங் மற்றும் குவாங்ஸோ மாகாணத்தின் இடையே இரண்டாயிரத்து 298 கிலோ மீட்டர் நீளமுள்ள இருப்புப் பாதையில் அதி நவீன புல்லட் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

மணிக்கு சுமார் 300 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் இந்த புல்லட் ரெயில்கள், இப்பாதையின் ஒட்டுமொத்த தூரத்தையும் எட்டே மணி நேரங்களுக்குள் கடந்து விடுவதால், உலகிலேயே மிகவும் நீளமான புல்லட் ரெயில் சேவையாக இது கருதப்படுகின்றது.

சமீபத்தில் சீனாவில் சுற்றுப்பயணம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் பிற பகுதிகளையும் இத்தகையை அதிநவீன மற்றும் அதிவேக புல்லட் ரெயில்களின் மூலம் இணைக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

இதனையடுத்து, சென்னை-டெல்லி இடையிலான ஆயிரத்து 754 கிலோ மீட்டர் தூரத்தை புல்லட் ரெயில் மூலம் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.

சென்னை-டெல்லி புல்லட் ரெயில் திட்டத்துக்கு சுமார் 32.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய ரெயில்வே அதிகாரிகளுக்கு இந்த திட்டப் பணிகளுக்கான தொழில் நுட்ப ஒத்துழைப்பை இலவசமாக வழங்குவதாக சீனா அறிவித்தது.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் இதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்திய ரெயில்வே துறையை சேர்ந்த சில மூத்த அதிகாரிகள், சீனத் தலைநகர் பீஜிங்குக்கு நேற்று சென்றனர்.

புல்லட் ரெயில் பாதைக்கான கட்டமைப்பு பணிகள், இயக்கம், பராமரிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக அந்நாட்டு ரெயில்வே உயரிதிகாரிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

சென்னை-டெல்லி இடையிலான புல்லட் ரெயில் சேவை தொடங்கி விட்டால், உலகிலேயே மிகவும் நீளமான இரண்டாவது புல்லட் ரெயில் சேவையாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.



3 days after opening 4 infants die in Hospital children wing

திறப்பு விழா நடத்தப்பட்ட மூன்றே நாட்களில் தாய்-சேய் நல விடுதியில் 4 பச்சிளம் குழந்தைகள் பலி


அமிர்தசரஸ், நவ.24-

பஞ்சாப் மாநிலம், லூதியானா மாவட்டத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையில்
பிரசவம் பார்ப்பது உள்ளிட்ட கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவம் செய்யும் தாய்-சேய் நல விடுதி தனிப்பிரிவு கடந்த 3 நாட்களுக்கு முன்னர் திறக்கப்பட்டது.

கடந்த 3 நாட்களில் மட்டும் இங்கு அனுமதிக்கப்பட்டிருந்த 4 பெண்களின் குழந்தைகள் பிரசவத்தின்போது இறந்து விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பிரசவம் நடந்த போது, அந்த பெண்களின் அருகாமையில் தேர்ச்சி பெற்ற மகப்பேறு மருத்துவர்கள் யாரும் அங்கு பணியில் இல்லை. நான்காம் வகுப்பு ஊழியர்கள் என்றழைக்கப்படும் சாதாரண பெண்கள் பிரசவம் பார்த்ததாகவும், 4 பச்சிளம் குழந்தைகள் பலியானதற்கு அந்த மருத்துவமனை நிர்வாகத்தின் கவனக்குறைவே காரணம் எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனினும், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள தலைமை மருத்துவர், இந்த புதிய தாய்-சேய் நலப்பிரிவில் உள்ள ஆபரேஷன் தியேட்டர் இன்னும் இயங்கும் நிலையில் இல்லாததால், பழைய மருத்துவமனையில் உள்ள ஆபரேஷன் தியேட்டருக்கு அனுப்பி வைத்தோம். இவ்விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று மட்டும் தெரிவித்துள்ளார்.


Monday, 24 November 2014

Lord Swraj Paul attacks for not installing Gandhi statue at British Parliament Square

காந்திக்கு சிலை வைக்க இங்கிலாந்து அரசிடம் பணம் இல்லையா? இந்திய வம்சாவளி தொழிலதிபர் வேதனை


லண்டன், நவ.23-

இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தியின் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்த அந்நாட்டின் அரசு அதற்கான நிதியை ஒதுக்காதது குறித்து லண்டனில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் வேதனை தெரிவித்துள்ளார்.

இந்தியராக பிறந்து தற்போது இங்கிலாந்து நாட்டின் குடியுரிமை பெற்று லண்டனில் வாழந்து வருபவர், லார்ட் சுவராஜ் பால்(83). அந்த நாட்டின் பெரும் தொழிலதிபராகவும், கொடையாளராகவும் இருக்கும் இவர், இங்குள்ள இரண்டு பிரபல பல்கலைக்கழக்ங்களின் வேந்தராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்திய வெளியுறவு துறை மந்திரி அடங்கிய குழுவினர் முன்னர் இந்தியாவுக்கு வந்தபோது, அந்நாட்டின் பாராளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் உலகின் பெருந்தலைவர்களின் சிலைக்கு நடுவே மகாத்மா காந்தியின் சிலையும் வைக்கப்படும் என்று அறிவித்தனர்.

இந்த சிலையை அமைக்க அங்கிருக்கும் இந்தியர்கள் ஒன்று திரண்டு சுமார் 10 லட்சம் பவுண்டுகள் வரை நிதி திரட்டியுள்ளனர். இதற்கு சமமான ஒரு தொகையை செலவிட்டு
பாராளுமன்ற வளாகத்தில் காந்தியின் சிலையை நிர்மானிக்க முன்வராத இங்கிலாந்து அரசுக்கு லார்ட் சுவராஜ் பால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது இது தொடர்பாக தனது வேதனையை வெளிப்படுத்திய லார்ட் சுவராஜ் பால் கூறிய கருத்தின் சிறு பகுதி:-

இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தியின் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்தபோது அந்த செய்தி பெரிய அளவில் வெளியானது.
இதை அறிந்த நான் மிகவும் பூரிப்படைந்தேன்.

இந்த சிலையை நிறுவுவதற்கு இங்குள்ள இந்தியர்கள் 10 லட்சம் பவுண்டுகளை திரட்டி தந்துள்ள நிலையில், அதற்கு இணையான ஒரு தொகையை இங்கிலாந்து அரசால் ஒதுக்க முடியாதா?

இந்த அரசாங்கம் மற்ற எவ்வளவோ விவகாரங்களுக்கு ஏராளமான தொகையை வீணாக செலவிடுகின்றது. ஆனால், ரத்தம் சிந்தாமல் ஒரு நாட்டின் விடுதலையை வென்றெடுக்க முடியும் என்ற உண்மையை உலக வரலாற்றுக்கு முதன்முதலில் உணர்த்திய ஒரு மனிதரின் (காந்தி) சிலைக்கு 10 லட்சம் பவுண்டுகளை செலவழிக்க தயக்கம் காட்டுகிறது.

எனக்கிருக்கும் வருத்தம் எல்லாம் என்னவென்றால்.., ஒருவருக்கு எதையுமே அன்பளிப்பாக கொடுக்காமல் அதற்கு நீங்கள் ஏதாவது தர முடியுமா? என்று கேட்பது போல் இங்கிலாந்து அரசு நடந்துக் கொள்கிறதே என்பதுதான்.

இந்த நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தியின் சிலை வைக்கப்படும் என்ற அறிவிப்பை இந்தியாவுக்கு சென்றபோது வெளியிட்டது ஏன்? அந்த அறிவிப்புக்கு பின்னணியில் இருந்தது என்ன? என்னும் எனது கேள்விக்கு யாராவது (இங்கிலாந்து அரசு தரப்பில் இருந்து) பதில் சொல்ல வேண்டும்.

அந்த அறிப்பின் பின்னணியில் இருந்தவர்கள் இதற்கு பதில் சொல்லியே தீர வேண்டும். ஆனால், இதற்கான மிகவும் எளிமையான பதில் எனக்கு தெரியும். இந்தியாவை திருப்திப்படுத்துவதற்காகவே அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆனால், இந்த அறிவிப்பை வெளியிட்டபோது அவர்களுக்கு இருந்த மகிழ்ச்சி, இந்த சிலையை அமைக்க நாம்தான் செலவு செய்தாக வேண்டும் என்று அறிந்த வேளையில் காணாமல் போய்விட்டது.

இவ்வாறு அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

இங்கிலாந்து அரசின் சிக்கன நடவடிக்கையாக லண்டன் நகரில் உள்ள லண்டன் மிருகக்காட்சி சாலையை மூடிவிட 1992-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டபோது, அந்த முடிவை தடுத்து, அந்த மிருகக்காட்சி சாலை தொடர்ந்து செயல்பட 10 லட்சம் பவுண்டுகளை கொடையாக அளித்தவர், லார்ட் சுவராஜ் பால் என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, 21 November 2014

Senior clerk nabbed taking bribe

Senior clerk nabbed taking bribe

Thane, Nov 18 (PTI) A senior clerk posted at Vasai
Virar Municipal Corporation was caught red-handed while
allegedly accepting bribe here, Anti Corruption Bureau
officials said today.

    Senior clerk Sandeep Anant Khanivdekar (45) had
demanded a bribe of Rs 30,000 from the complainant for
transfer of name in a property tax matter, which was to be
paid in instalments and the first instalment of Rs 10,000 was
to be handed over yesterday, SP, Thane ACB Datta Karale said.

    ACB sleuths laid a trap at the Kaman division office
of the Corporation last evening and nabbed Khanivdekar taking
Rs 10,000 as bribe, he said.

    A case has been registered against the officer in this
regard under relevant sections of Prevention of Corruption
Act.
    Further probe into the matter is on, officials said.
PTI COR

Thursday, 20 November 2014

Extortionists overpowered by locals in Arunachal Pradesh

மாமூல் கேட்ட தாதாக்களுக்கு தர்ம அடி போட்டு, போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

இட்டாநகர், நவ.19-

அருணாசலப்பிரதேசம் மாநிலம், பப்பும் பாரே மாவட்டத்தை சேர்ந்த ஒரு ரவுடி கும்பல்  இங்குள்ள டெங்காம்பாரி பகுதியில் வியாபாரம் செய்து வரும் சிறு வணிகர்கள் முதல் பெரும் தொழிலதிபர்கள் வரை அனைவரையும் மிரட்டி மாமூல் வாங்குவதையே தொழிலாக செய்து வந்தது.

அரசு துறையினர் நில ஆர்ஜிதம் செய்ய ‘நோட்டீஸ்’ அனுப்புவது போலவே, சுழற்சி முறையில், ‘நீங்கள் இன்ன தேதியில் எங்களுக்கு இவ்வளவு தொகையை தர வேண்டும்’ என்று இந்த தாதாக்கள் ’எச்சரிக்கை நோட்டீஸ்’ அனுப்புவார்கள்.

இதன் மூலம், இந்த கும்பல் பல ஆயிரம் முதல் சில லட்சங்கள் வரை மாதந்தோறும் சம்பாதித்து வந்ததாக கூறப்படுகிறது. பணம் தர மறுப்பவர்களை குடும்பத்தோடு தீர்த்துகட்டி விடுவோம் என இவர்கள் மிரட்டுவதால் அனைவரும் வாயை மூடிக் கொண்டு ‘மாமூலை’ தந்துவிடுவதுண்டு.

இருப்பினும், இந்த ரவுடிகளின் அட்டகாசத்துக்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் என்று தக்க தருணத்தை எதிர்நோக்கி சிலர் காத்திருந்தனர்.

இந்நிலையில், ஏற்கனவே அனுப்பிய ‘நோட்டீசுக்கு’ வசூல் செய்யும் நோக்கத்தில் இந்த ரவுடி கும்பலை சேர்ந்த பிரசான், அல்ஹென் ஆகியோர் நேற்று இங்குள்ள பிரபல பஜார் பகுதிக்கு வந்தனர்.

நோட்டீஸ் அனுப்பிய நபரிடம் சென்று மாமூல் கேட்டபோது, பணம் தர முடியாது என்று அவர் தகராறு செய்ய தொடங்கினார். இருவருக்கும் இடையில் முற்றிய வாக்குவாதத்தை கண்ட அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ரவுடிகளின் மீது பாய்ந்து, மடக்கிப் பிடித்து, தர்ம அடி போட்டு இன்று போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ஊர் மக்களின் இந்த துணிச்சலை பாராட்டிய அருணாசலப்பிரதேசம் மாநில உள்துறை மந்திரி டங்கா பியாலிங் அருணாச்சல், ‘ஊர் மக்களின் இதைப்போன்ற தைரியமான நடவடிக்கைகள் இனி, ரவுடிகளுக்கு கலக்கத்தையும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் போலீஸ் துறையினருக்கு புதிய ஊக்கத்தையும் தரும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


Monday, 17 November 2014

12 killed after passenger van collides with truck

லாரி மீது வேன் மோதிய விபத்தில் 10 பெண்கள் உள்பட 12 பேர் பலி

லக்னோ, நவ.16-

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இன்று காலை வேன் மீது லாரி மோதிய விபத்தில் 12 பேர் பலியாகினர்.

பரேலியில் நடைபெற்ற ஒரு ஆன்மிக நிகழ்ச்சிக்கு அந்த வேனில் இருந்தவர்கள் சென்றுக் கொண்டிருந்ததாகவும், மொராடாபாத் மாவட்டத்துக்குட்பட்ட தினகர்பூர்-குண்டர்கி சாலை வழியே சென்றபோது எதிர் திசையில் இருந்து வைக்கோல் சுமை ஏற்றியபடி வேகமாக வந்த லாரி அந்த வேனின் மீது மோதியதில் 30 முதல் 50 வயதுக்குட்பட்ட 10 பெண்கள் உள்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்களை ஆஸ்பத்திரியில் அனுமதித்து, பிடிபட்ட லாரி டிரைவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Monday, 10 November 2014

நேபாளத்துக்கு கடத்த முயன்ற ஆயிரம் கிலோ கஞ்சா பீகாரில் பறிமுதல்

பாட்னா, நவ.9-

பீகார் மாநிலம், புர்னியா மாவட்டத்தின் வழியாக வெளியூர்களுக்கு கள்ளத்தனமாக கஞ்சா கடத்தப்படுவதாக அம்மாநில போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்புப் படையினருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதனையடுத்து, புர்னியா மாவட்டத்துக்குட்பட்ட கஜ்ரா பகுதி சாலையில் சோதனைச் சாவடிகளை அமைத்துதீவிர வாகனச் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த ஒரு மினி வேனை மடக்கி சோதனையிட்டதில், உள்ளே பெரியப் பெரிய பைகளில் கஞ்சாவை மறைத்து, கடத்த முயன்றது தெரியவந்தது.

நேபாளத்துக்கு அனுப்பும் நோக்கத்தில் கொண்டு செல்லப்பட்ட சுமார் ஆயிரம் கிலோ எடையுள்ள அந்த கஞ்சாப் பைகளை கைப்பற்றிய சிறப்புப் படையினர், அந்த வேனின் டிரைவர், கிளீனர் மற்றும் ஒரு நபரை கைது செய்து விசாரித்து வருகின்றார்.

Tuesday, 4 November 2014

3,325 சீக்கியர்கள் படுகொலைக்கு நீதி கேட்டு ஒபாமாவிடம் முறையீடு

வாஷிங்டன், நவ.4-

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, கடந்த 1984-ம் ஆண்டு தனது பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
அந்தப் படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. இதில் 3,325 சீக்கியர்கள் பலியாகினர். ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு சொந்தமான பலநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சூறையாடி, சேதப்படுத்தப்பட்டன.

சீக்கியர்களுக்கு எதிரான இந்த சம்பவம் நிகழ்ந்து சுமார் 30 ஆண்டு கழித்த நிலையில் அமெரிக்காவில் உள்ள ‘சீக்கியர்களுக்கான நீதி’  [Sikhs For Justice (SFJ)] என்ற மனித உரிமை அமைப்பினர் மற்றும் அந்த கலவரங்களினால் பாதிக்கப்பட்டு தற்போது அமெரிக்காவில் வாழும் இருவர் இணைந்து ‘1984ம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தின் போது சீக்கியர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இழப்பீடு வழங்க வேண்டும்’ என நியூயார்க் கிழக்கு மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இது தொடர்பாக பதில் அளிக்குமாறு சோனியாவுக்கு அமெரிக்க கோர்ட் சம்மன் அனுப்பியிருந்தது, நினைவிருக்கலாம்.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் இடம்பெற விரும்பும் இந்தியா சுமார் 3 ஆயிரம் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட கலவர வழக்கில் வெறும் 30 பேர் மீது மட்டும் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், கலவரத்துக்கு காரணமான காங்கிரஸ் கட்சியினரையும், முன்னாள் அரசு அதிகாரிகளையும் இந்திய அரசு பாதுகாத்து வருவதாகவும் சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

திட்டமிடப்பட்ட இந்த படுகொலைகள் விவகாரத்தில், தலையிட்டு கலவரத்தின்போது பலியான மற்றும் பாதிக்கப்பட்ட சீக்கியர்களுக்கு உரிய நீதி கிடைக்க உதவிடுமாறு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு அந்த அமைப்பினர் நேற்று கடிதம் எழுதியுள்ளனர்.

Monday, 3 November 2014

Death toll in Pak suicide attack at Wagah Border rises to 61

Lahore, Nov 3 (PTI) The death toll in the horrific
suicide attack that shook Pakistan minutes after the popular
flag-lowering ceremony at Wagah climbed to 61 today, even as
security agencies arrested about 20 suspects from the Indo-Pak
border area.
    Ten women, eight children and three security personnel
were among the 61 people who have died in the attack that took
place yesterday when a suicide attacker detonated a powerful
bomb at Wagah.
    Over 100 people were injured in the incident and are
being treated in different Lahore's hospitals where emergency
has been declared.
    The blast took place when a large number of people were
returning after attending the flag lowering ceremony at the
main Indo-Pak land border crossing, which is heavily guarded
by the Punjab Rangers.
    A young suicide-bomber blew himself up near the main exit
gate of Parade Avenue at 6.03 pm (local time), causing
colossal devastation.
    "The death toll of the devastating suicide attack at
Wagah border has risen to 61. The condition of some injured is
still critical and the doctors are battling to save their
lives," Punjab Emergency Services Rescue spokesman Jam Sajjad
told PTI.
    About 43 bodies have been handed over to the families
while the remaining are yet to be recognised, Sajjad said.
    "We have sought the help of the National Registration
Database Authority (Nadra) for recognition of 18 bodies," he
said.
    The law enforcement agencies have launched operation in
the residential areas in Wagah and taken about 20 suspects
into custody, Lahore police spokesman Niyab Haider Naqvi said.
    "A joint investigation team of police, rangers and
intelligence agencies have started its probe into the
incident. The army and rangers along with police will provide
security to Ashura processions in Lahore and they have been
put on high alert in the wake of Sunday's attack," he said.
    Punjab Interior Minister Col (Retd) Shujah Khanzada said
the target of the suicide bomber was the venue of the flag
hoisting ceremony.
    "The suicide-bomber wanted to reach the Parade Avenue to
cause maximum devastation but he blew himself up near the
entrance of the main gate after failing to reach the Parade
Avenue," he said.
    At least three militant factions have claimed the grizzly
bombing. Al-Qaeda affiliated militant group Jundullah, a
splinter group of the Tehrik-i-Taliban Pakistan (TTP), was
first to claim responsibility of the attack.
    Shortly afterwards Jamaat-ul-Ahrar said its bomber Hafiz
Hanifullah carried out the attack. Later, a lesser-known Mahar
Mehsud group also claimed responsibility for the bombing.