Monday, 17 November 2014

12 killed after passenger van collides with truck

லாரி மீது வேன் மோதிய விபத்தில் 10 பெண்கள் உள்பட 12 பேர் பலி

லக்னோ, நவ.16-

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இன்று காலை வேன் மீது லாரி மோதிய விபத்தில் 12 பேர் பலியாகினர்.

பரேலியில் நடைபெற்ற ஒரு ஆன்மிக நிகழ்ச்சிக்கு அந்த வேனில் இருந்தவர்கள் சென்றுக் கொண்டிருந்ததாகவும், மொராடாபாத் மாவட்டத்துக்குட்பட்ட தினகர்பூர்-குண்டர்கி சாலை வழியே சென்றபோது எதிர் திசையில் இருந்து வைக்கோல் சுமை ஏற்றியபடி வேகமாக வந்த லாரி அந்த வேனின் மீது மோதியதில் 30 முதல் 50 வயதுக்குட்பட்ட 10 பெண்கள் உள்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்களை ஆஸ்பத்திரியில் அனுமதித்து, பிடிபட்ட லாரி டிரைவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment