Tuesday, 25 November 2014

3 days after opening 4 infants die in Hospital children wing

திறப்பு விழா நடத்தப்பட்ட மூன்றே நாட்களில் தாய்-சேய் நல விடுதியில் 4 பச்சிளம் குழந்தைகள் பலி


அமிர்தசரஸ், நவ.24-

பஞ்சாப் மாநிலம், லூதியானா மாவட்டத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையில்
பிரசவம் பார்ப்பது உள்ளிட்ட கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவம் செய்யும் தாய்-சேய் நல விடுதி தனிப்பிரிவு கடந்த 3 நாட்களுக்கு முன்னர் திறக்கப்பட்டது.

கடந்த 3 நாட்களில் மட்டும் இங்கு அனுமதிக்கப்பட்டிருந்த 4 பெண்களின் குழந்தைகள் பிரசவத்தின்போது இறந்து விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பிரசவம் நடந்த போது, அந்த பெண்களின் அருகாமையில் தேர்ச்சி பெற்ற மகப்பேறு மருத்துவர்கள் யாரும் அங்கு பணியில் இல்லை. நான்காம் வகுப்பு ஊழியர்கள் என்றழைக்கப்படும் சாதாரண பெண்கள் பிரசவம் பார்த்ததாகவும், 4 பச்சிளம் குழந்தைகள் பலியானதற்கு அந்த மருத்துவமனை நிர்வாகத்தின் கவனக்குறைவே காரணம் எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனினும், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள தலைமை மருத்துவர், இந்த புதிய தாய்-சேய் நலப்பிரிவில் உள்ள ஆபரேஷன் தியேட்டர் இன்னும் இயங்கும் நிலையில் இல்லாததால், பழைய மருத்துவமனையில் உள்ள ஆபரேஷன் தியேட்டருக்கு அனுப்பி வைத்தோம். இவ்விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று மட்டும் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment