Tuesday, 25 November 2014

Indian Railways team in China for Delhi Chennai bullet train

உலகிலேயே இரண்டாவது நீளமான சென்னை-டெல்லி புல்லட் ரெயில்:சீனாவில் இந்திய அதிகாரிகள் ஆய்வு

பீஜிங், நவ.25-

சீனாவின் தலைநகரான பீஜிங் மற்றும் குவாங்ஸோ மாகாணத்தின் இடையே இரண்டாயிரத்து 298 கிலோ மீட்டர் நீளமுள்ள இருப்புப் பாதையில் அதி நவீன புல்லட் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

மணிக்கு சுமார் 300 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் இந்த புல்லட் ரெயில்கள், இப்பாதையின் ஒட்டுமொத்த தூரத்தையும் எட்டே மணி நேரங்களுக்குள் கடந்து விடுவதால், உலகிலேயே மிகவும் நீளமான புல்லட் ரெயில் சேவையாக இது கருதப்படுகின்றது.

சமீபத்தில் சீனாவில் சுற்றுப்பயணம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் பிற பகுதிகளையும் இத்தகையை அதிநவீன மற்றும் அதிவேக புல்லட் ரெயில்களின் மூலம் இணைக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

இதனையடுத்து, சென்னை-டெல்லி இடையிலான ஆயிரத்து 754 கிலோ மீட்டர் தூரத்தை புல்லட் ரெயில் மூலம் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.

சென்னை-டெல்லி புல்லட் ரெயில் திட்டத்துக்கு சுமார் 32.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய ரெயில்வே அதிகாரிகளுக்கு இந்த திட்டப் பணிகளுக்கான தொழில் நுட்ப ஒத்துழைப்பை இலவசமாக வழங்குவதாக சீனா அறிவித்தது.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் இதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்திய ரெயில்வே துறையை சேர்ந்த சில மூத்த அதிகாரிகள், சீனத் தலைநகர் பீஜிங்குக்கு நேற்று சென்றனர்.

புல்லட் ரெயில் பாதைக்கான கட்டமைப்பு பணிகள், இயக்கம், பராமரிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக அந்நாட்டு ரெயில்வே உயரிதிகாரிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

சென்னை-டெல்லி இடையிலான புல்லட் ரெயில் சேவை தொடங்கி விட்டால், உலகிலேயே மிகவும் நீளமான இரண்டாவது புல்லட் ரெயில் சேவையாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment