Wednesday, 26 November 2014

Man held for molesting minor daughter

பெற்ற மகள் என்றும் பாராமல் 12 வயது சிறுமியை சீரழித்த 40 வயது கொடியவன் கைது

மும்பை, நவ.26-

மராட்டிய மாநிலம், பல்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் பகுதியை சேர்ந்த ரமேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இதே பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் வேலை செய்து வருகிறான்.

40 வயதாகும் ரமேஷுக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த ஓராண்டுக்கு முன்னர் ஒருநாள், மனைவி வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த தனது 12 வயது மகளை பலாத்லாராம் செய்த ரமேஷ், பெற்ற மகள் என்றும் பாராமல் அந்த சிறுமியை கற்பழித்து விட்டான்.

பின்னர், ஒரு சில நாட்களில் மனைவி வேலைக்கு சென்ற பிறகு ருசி கண்ட பூனையாய்
வீட்டையே சுற்றிவந்த அவன் அந்த சிறுமியை மிரட்டி கற்பழிப்பதையே வாடிக்கையாக்கிக் கொண்டான்.

குடும்பத்தில் சண்டை, சச்சரவு ஏற்பட்டு விடுமே என்ற பயத்தில் அந்த காமுகன் செய்த கொடூரத்தை பெற்ற தாயிடம் கூட கூறாமல் இத்தனை நாட்களாக மறைத்து வைத்திருந்த சிறுமி, நேற்று இந்த தகாத உறவைப் பற்றி அம்மாவிடம் சொல்லி அழுதிருக்கிறாள்.

இதனையடுத்து, அவர்கள் இருவரும் அளித்த புகாரின் பேரில் ரமேஷை நேற்றிரவு கைது செய்த போலீசார், ஏராளமான குற்றப்பிரிவுகளின்கீழ் அவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.



No comments:

Post a Comment