மாமூல் கேட்ட தாதாக்களுக்கு தர்ம அடி போட்டு, போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்
இட்டாநகர், நவ.19-
அருணாசலப்பிரதேசம் மாநிலம், பப்பும் பாரே மாவட்டத்தை சேர்ந்த ஒரு ரவுடி கும்பல் இங்குள்ள டெங்காம்பாரி பகுதியில் வியாபாரம் செய்து வரும் சிறு வணிகர்கள் முதல் பெரும் தொழிலதிபர்கள் வரை அனைவரையும் மிரட்டி மாமூல் வாங்குவதையே தொழிலாக செய்து வந்தது.
அரசு துறையினர் நில ஆர்ஜிதம் செய்ய ‘நோட்டீஸ்’ அனுப்புவது போலவே, சுழற்சி முறையில், ‘நீங்கள் இன்ன தேதியில் எங்களுக்கு இவ்வளவு தொகையை தர வேண்டும்’ என்று இந்த தாதாக்கள் ’எச்சரிக்கை நோட்டீஸ்’ அனுப்புவார்கள்.
இதன் மூலம், இந்த கும்பல் பல ஆயிரம் முதல் சில லட்சங்கள் வரை மாதந்தோறும் சம்பாதித்து வந்ததாக கூறப்படுகிறது. பணம் தர மறுப்பவர்களை குடும்பத்தோடு தீர்த்துகட்டி விடுவோம் என இவர்கள் மிரட்டுவதால் அனைவரும் வாயை மூடிக் கொண்டு ‘மாமூலை’ தந்துவிடுவதுண்டு.
இருப்பினும், இந்த ரவுடிகளின் அட்டகாசத்துக்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் என்று தக்க தருணத்தை எதிர்நோக்கி சிலர் காத்திருந்தனர்.
இந்நிலையில், ஏற்கனவே அனுப்பிய ‘நோட்டீசுக்கு’ வசூல் செய்யும் நோக்கத்தில் இந்த ரவுடி கும்பலை சேர்ந்த பிரசான், அல்ஹென் ஆகியோர் நேற்று இங்குள்ள பிரபல பஜார் பகுதிக்கு வந்தனர்.
நோட்டீஸ் அனுப்பிய நபரிடம் சென்று மாமூல் கேட்டபோது, பணம் தர முடியாது என்று அவர் தகராறு செய்ய தொடங்கினார். இருவருக்கும் இடையில் முற்றிய வாக்குவாதத்தை கண்ட அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ரவுடிகளின் மீது பாய்ந்து, மடக்கிப் பிடித்து, தர்ம அடி போட்டு இன்று போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஊர் மக்களின் இந்த துணிச்சலை பாராட்டிய அருணாசலப்பிரதேசம் மாநில உள்துறை மந்திரி டங்கா பியாலிங் அருணாச்சல், ‘ஊர் மக்களின் இதைப்போன்ற தைரியமான நடவடிக்கைகள் இனி, ரவுடிகளுக்கு கலக்கத்தையும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் போலீஸ் துறையினருக்கு புதிய ஊக்கத்தையும் தரும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment